விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர்களா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் சேர்க்கப்படுவது குறித்த விவகாரத்தை நார்வே தூதுக் குழுவினர்மூலம் இலங்கை அரசு பெரிதுபடுத்தப் போவதாக இலங்கை அமைச்சர் ஒருவர் கூறினார்.

விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களை அதிக அளவில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாக இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் சந்திரிகாவின் இந்தப் புகாரை மறுத்த விடுதலைப் புலிகள், அவருடைய இந்தப் பேச்சு சுமூகமாக நடந்துவரும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் கூறினர்.

இந்நிலையில் சந்திரிகா மீண்டும் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார். இலங்கை வந்துள்ள நார்வே தூதுக்குழுவினரிடம் இப்பிரச்சனை குறித்த புகாரை அவர் எழுப்பப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே யாழ்ப்பாணம் துறைமுகப் பகுதியில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசுநீக்கியுள்ளது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக இதற்காகப் போராடி வந்த யாழ்ப்பாண மீனவர்கள் நேற்று மாலையுடன்தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இந்நிலையில் லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்துப்பேசிய நார்வே தூதுக் குழுவினர் இன்று காலை கொழும்பு வந்து சேர்ந்தனர்.

சந்திரிகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்பட பல தலைவர்களையும் நார்வே குழுவினர் இன்றும் நாளையும்சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளனர். இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தம் குறித்துதான் நார்வே குழுவினர் தற்போதுவிவாதிக்கவுள்ளனர் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+