"மனித உரிமை பற்றி பேச பாக்.குக்கு என்ன உரிமை?"
ஹால்த்வானி (உத்தராஞ்சல்):
மனித உரிமை மீறல்களின் மொத்த உருவமான பாகிஸ்தானுக்கு இந்தியாவில் நடப்பதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்களைப் பற்றிப் பேச உரிமையே கிடையாது என்று பிரதமர் வாஜ்பாய் கடுமையாகக் கூறினார்.
ஆனால் பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அங்கு எந்தஅளவுக்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இவ்வாறு ராணுவ ஆட்சி நடத்தி வரும் ஒருவர் இந்தியாவின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுவதற்குஎன்ன உரிமை உள்ளது என்று வாஜ்பாய் உத்தராஞ்சலில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் சிறிது காட்டமாகவேபேசினார்.
மேலும் காஷ்மீரில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சி செய்கிறதுஎன்றும் வாஜ்பாய் கூறினார்.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் அத்வானியும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்பைக் கடுமையாகத்தாக்கிப் பேசியுள்ளார்.
காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம்தான் நடந்து வருகிறது என்று முஷாரப் தொடர்ந்து கூறி வருவதையும் அத்வானிகண்டித்தார்.
இந்தியாவின் ஒரு பகுதிதான் காஷ்மீர் என்பதை வலியுறுத்திப் பேசிய அத்வானி, இம்மாநிலத்தைக் கைப்பற்றபாகிஸ்தான் 3 போர்களை நடத்திப் பார்த்து தோல்வியடைந்ததுதான் மிச்சம் என்றும் கூறினார்.
இதற்கிடையே பாகிஸ்தானின் குற்றவாளிகள் பட்டியலில் அத்வானி பெயரும் உள்ளதே என்ற கேள்விக்கு அவர்நேரடியாகப் பதில் சொல்ல மறுத்து விட்டார்.
பட்டியல் இருப்பதாகப் பாகிஸ்தான் கூறிக் கொண்டிருக்கிறதே தவிர, எந்தவொரு பட்டியலையும் இதுவரைஇந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அத்வானி கூறினார்.
சண்டிகரில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் அத்வானி இவ்வாறு கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications