எனக்கே 4 கார்தான், ஸ்டாலினுக்கு 60 காரா? - பன்னீர் கோபம்
தேனி:
தேர்தல் விதி முறைகளை மீறும் விதத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், மு.க.ஸ்டாலினும் ஈடுபடுவதாகமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் கடைசி கட்டமாக வியாழக்கிழமை பன்னீர்செல்வம் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.வடுகபட்டியில் பிரச்சாரம் செய்யும் பன்னீர் கூறியதாவது:
முதல்வராகிய நானே 4 கார்களுடன்தான் சென்று பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் சென்னை மேயராக உள்ளமு.க.ஸ்டாலின் 60 கார்கள் புடை சூழ சென்று பிரச்சாரம் செய்கிறார். இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும்.
இதுகுறித்து திமுக தொண்டர்களிடம் தொகுதி மக்கள் கேட்டால், அப்படித்தான் செய்வோம். அப்போதாவதுதேர்தல் ரத்து செய்யப்படுகிறதா என்று பார்ப்போம் என்று கூறுகிறார்கள்.
எப்பாடு பட்டாவது இந்தத் தேர்தலை ரத்து செய்து விடுவது என்ற உறுதியில் திமுகவினர் இருக்கிறார்கள். இதற்காகதேர்தலின்போது ரத்தக்களரியை ஏற்படுத்தவும் அவர்கள் தயாராகி வருவதாக தெரிகிறது.
இதேபோல மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஜாதி துவேஷத்தை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார். மத்தியஅமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் பாலு, இதுபோல பேசுவது அவர் எடுத்துக் கொண்டஉறுதிமொழிக்கு மாறானதாகும். இதுவும் கூட தேர்தல் விதிமீறல்தான். இதுகுறித்து தலைமைத் தேர்தல் கமிஷனுக்குகடிதம் அனுப்பப்படும்.
கருணாநிதிக்கு, தமிழகத்தை தான் ஆள வேண்டும், இல்லாவிட்டால் தனது மகன் ஆள வேண்டும் என்றநினைப்புதான் உள்ளது. ஏழை மக்களைப் பற்றி அவருக்குக் கவலையில்லை என்று பன்னீர்செல்வம் கூறினார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 மணியுடன் முடித்துக் கொண்டார் பன்னீர்செல்வம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications