இப்போதைக்கு படைகள் வாபஸ் இல்லை: பெர்னாண்டஸ்
எல்லைப் பகுதி:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் வரையில் எல்லையிலிருந்து இந்தியப்படைகளை வாபஸ் பெற மாட்டோம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீண்டும்வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்குமா என்பது குறித்த நடவடிக்கைகளை நாங்கள்உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று அப்போது பெர்னாண்டஸ் கூறினார்.
அந்தத் தீவிரவாதிகளை நம்மிடம் ஒப்படைப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைபாகிஸ்தான்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை எதிர்க்கும் கூட்டணி நாடுகளுடன் அங்கம் வகிக்கும் பாகிஸ்தானே இன்னும் எல்லை தாண்டியபயங்கரவாதத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது என்றும் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டினார்.
மேலும் பாகிஸ்தான் அதிபரான பர்வேஸ் முஷாரப் தன்னுடைய பேச்சுக்கும் செயலுக்கும் எந்தவிதமானசம்பந்தமும் இல்லை என்பதை இன்னும் நிரூபித்துக் கொண்டிருப்பதாகவும் பெர்னாண்டஸ் கூறினார்.
எல்லையில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான பல சந்தர்ப்பங்களையும் நாம் கொடுத்துள்ள போதிலும், அவற்றைப்பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்வதற்குத் தவறி வருகிறது என்றும் பெர்னாண்டஸ் கூறினார்.
எல்லையில் இந்தியா ஏன் படைகளைக் குவித்துள்ளது என்பது பற்றி உலக நாடுகளுக்கு நன்றாகவே தெரியும் என்றபெர்னாண்டஸ், டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி:
இதற்கிடையே ஜம்மு அருகே உள்ள எல்லைப் பகுதிக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படையினர் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் ஒரு இந்திய ராணுவ வீரர் பலியானார்.
அக்னூர் பகுதியில் உள்ள கனசாக்கில் உள்ள ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடுநடத்தினர்.
இதில் ராஜ்குமார் என்ற ராணுவ வீரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர்உயிரிழந்தார்.
எல்லையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்துநடப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications