சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை கோரி வழக்கறிஞர்கள் போராட முடிவு
சென்னை:
உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் ஆரம்பிக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் செய்ய முடிவுசெய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை தென் மாநிலங்களில் எங்காவது ஆரம்பிக்குமாறு சமீப காலமாக கோரிக்கை வலுத்துவருகிறது. எந்த வழக்கானாலும் கடைசியாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது என்பதால் மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பில் திருப்தியடையாத பொதுமக்கள் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்கிறார்கள்.
ஆனால் இதற்காக அவர்கள் டெல்லிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் கால விரயத்தோடு பணமும் அதிகம்செலவாகிறது.
இதனால் தென் மாநிலங்களில் எங்காவது குறிப்பாக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை நிறுவ வேண்டும்என்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்காக நாடாளுமன்றம் ஒரு குழுவை அமைத்து கிளை ஆரம்பிப்பது குறித்து ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டது.அந்தக் குழுவும் ஆய்வு செய்து சென்னையில் கிளையை ஆரம்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்துக்குப்பரிந்துரைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை மறுத்து விட்டது.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் இதற்காக ஒருநாள்போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எல்லோரும் கலந்து பேசி உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைப்பதற்காகக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications