பாக்.குடன் இந்தியா விளையாட அமைச்சர் நிபந்தனை
சென்னை:
கிரிக்கெட் விளையாடுவதற்கான நல்ல சூழலை முஷரப் ஏற்படுத்தினால், இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடஎந்த தடையும் இல்லை என்று மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இருந்து இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்திருந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அதிபர் முஷரப் இந்தியாவுடன் எங்கு வேண்டுமானாலும்எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை)கூறியதாவது:
கிரிக்கெட் விளையாட்டில் கூட பாகிஸ்தான், இந்தியாவுடன் வெறுப்புடன் தான் விளையாடி வந்தது. தீவிரவாதத்தைபாகிஸ்தான் ஆதரிக்கிறது என்று நாம் கூறுவதைத் திசை திருப்புவதற்கு தான் முஷாரப் இது மாதிரி கூறியுள்ளார்.
அவர் உண்மையிலேயே நல்ல நோக்கோடு கூறியிருந்தால், முதலில் அவர் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் நிறுத்த வேண்டும்.
இதையெல்லாம் செய்து முடித்து, கிரிக்கெட் விளையாடுவதற்கான நல்ல சூழலை முஷாரப் ஏற்படுத்தினால்,இந்தியா கலந்து கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications