ஆண்டிப்பட்டியில் தேர்தலை நிறுத்தக் கோரி மனுத் தாக்கல்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் தேர்தலை நிறுத்தக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி வாணியம்பாடி, சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில்குளறுபடி நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் கொடுத்தது.
இதனால் தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ் 3 தொகுதிகளிலும் விசாரணை நடத்தி அறிக்கையை தேர்தல்ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அதனால் ஆண்டிப்பட்டி தொகுதியைத் தவிர மற்ற 2 இடங்களிலும் தேர்தலைத்தள்ளி வைத்தது தேர்தல் கமிஷன்.
ஆண்டிப்பட்டியிலும் தேர்தலை தள்ளி வைக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வற்புறுத்தி வந்தன. ஆனால்அங்கு திட்டமிட்டபடி 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் உறுதியாக அறிவித்து விட்டது.தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரச்சாரமும் தற்போதுசூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக கூறி 2 தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைத்து விட்டு, முறைகேடுகள்அதிகம் நடந்திருக்கும் ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்துவது சட்டவிரோதமானது என்றும் எனவேஅங்கே தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை 11ம் தேதி உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications