கருணாநிதி எம்.எல்.ஏ. பதவியை இழப்பாரா? - சபாநாயகர் விளக்கம்
திருநெல்வேலி:
கருணாநிதி தொடர்ந்து 3 சட்டசபைத் தொடர்களில் கலந்து கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
திருநெல்வேலி சென்றிருந்த காளிமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டசபையில் தற்போது 3 இடங்கள் காலியாக உள்ளது. சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் சமீபத்தில்மறைந்த எம்.எல்.ஏவான செல்வராஜின் தொகுதியான அச்சரபாக்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த தேர்தல் கமிஷனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 11ம் தேதிக்கு முன் தொடங்கும். வழக்கம் போல பல்வேறுசட்ட முன்வரைவுகள், தீர்மானங்கள் அதில் கொண்டு வரப்படும். கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு இந்தக் கூட்டத் தொடர்நீடிக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து சட்டசபைக் கூட்டங்களை புறக்கணித்து வருகிறார். ஒரு உறுப்பினர்தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராமல் இருந்தால் அவரது பதவி பறி போய் விடும் என்று சட்டம் சொல்கிறது.
எனவே கருணாநிதி விஷயத்திலும் தேவைப்பட்டால், இந்த சட்ட நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்றுகாளிமுத்து கூறினார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி அதிமுக ஆட்சி பதவியேற்றதுமுதல் சட்டசபைக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார்.
அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்ற பிறகு, தனியாக சென்று அப்போதைய இடைக்கால சபாநாயகர் அப்துல்லத்தீபின் அறைக்குச் சென்று கருணாநிதி எம்.எல்.ஏ. பதவியை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications