மதுரை பஸ் எரிப்பு சம்பவம்: போலீசாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த 2000ம் ஆண்டு திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டபோது நடந்த கலவரத்தில் மதுரையில் பஸ்எரிக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் போலீசாருக்கு நோட்டீஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நீக்கப்பட்டதால் 2000ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் 22ம் தேதி நடந்த கலவரத்தில் பஸ்கள் எரிக்கப்பட்டன.

இது சம்பந்தமாக சிவகாசியைச் சேர்ந்த செண்பக மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரையில் கலவரத்தின் போது அழகிரியின் தூண்டுதல் காரணமாக அவரது ஆட்கள் பொதுச் சொத்துக்களுக்குசேதம் விளைவித்தனர். இது தொடர்பாக நான் மதுரை போலீசாரிடம் புகார் தெரிவித்தேன்.

ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் திமுகவினர்வழக்கை வாபஸ் வாங்கும் படி என்னைத் தாக்கினர்.

இது தொடர்பாகவும் நான் வேலம்பட்டி போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் புகாரை பெற மறுத்துவிட்டனர். மேலும் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மதுரையில் நடந்த பஸ் எரிப்பு குறித்தும், என்னைதாக்கியது குறித்தும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் செண்பகமூர்த்தி கூறியுள்ளார்.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகப்பன், இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படிசம்பந்தப்பட்ட போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+