டெண்டுல்கரைக் கடத்த திட்டமிட்ட ஜெய்ஷ் தீவிரவாதி
லண்டன்:
இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைக் கடத்த ஒமர் சயீத்ஷேக் என்ற ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அவர்களுடையவீடுகளிலும் ஆயுதமேந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். இவர்களை கடத்த சதி செய்த தீவிரவாதிகள் குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது இந்த சதி திட்டத்தில் லண்டன் பொருளாதார பள்ளியில் பயின்று பின்னர் தீவிரவாதியாக மாறிய ஒமர்சயீத் ஷேக் என்ற ஷேக் ஒமர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி 23ம் தேதி கராச்சியில் அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஷேக் ஒமர்முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறான்.
டேனியல் கடத்தல் தொடர்பாக இவன் இ-மெயில் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களைபாகிஸ்தான் போலீசார் சமீபத்தில் கைப்பற்றினர்.
அந்தக் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து இ-மெயில்களையும் பார்த்தபோதுதான், டெண்டுல்கர் மற்றும் கங்குலிஆகியோரை அவன் கடத்தத் திட்டமிட்டிருந்த சதியும் போலீசாருக்குத் தெரிய வந்தது.
கடந்த 1999ல் காட்மண்டுவில் இருந்த காண்டஹாருக்கு இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, இந்தியா விடுதலைசெய்த தீவிரவாதிகளில் ஷேக் ஒமரும் ஒருவன். கடந்த 1994 முதல் இந்தியச் சிறையில் இருந்த ஷேக் ஒமர்,விடுதலை செய்யப்பட்ட பிறகு ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பில் சேர்ந்தான்.
ஷேக் ஒமரை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications