"ரேஷன் பொருட்கள் குறைந்தால் ஊழியர்களுக்கு அபராதம்": தமிழக அரசின் உத்தரவுக்கு தடை
சென்னை:
ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் கையிருப்பு குறைந்தால் அதற்கு ஊழியர்கள் அபராதம் கட்ட வேண்டும்என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ரேஷன் கடைகளில் கையிருப்பில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்கும்போது பல சமயங்களில் பொருட்கள்குறைந்திருப்பது தெரிய வரும்.
இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள்தான் பொறுப்பு என்றும் குறைந்துள்ள பொருட்களின் அளவுக்கேற்ப அவர்கள்அபராதம் கட்ட வேண்டும் என்றும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரேஷன் கடைக்கு வரும் வழியிலேயே பல்வேறுகாரணங்களால் பொருட்கள் சேதமாகி, குறைந்தும் போய் விடுகிறது என்று அவர்கள் கூறினர்.
எனவே தமிழக அரசின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும் இதுகுறித்து பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி முருகேசன் தமிழக அரசுக்குஉத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications