தமிழகத்தில் ரெவின்யூ ஸ்டாம்புக்கு கடும் தட்டுப்பாடு
மதுரை:
தமிழகத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் மற்றும் இந்திய அரசுப் பணி ஸ்டாம்ப் ஆகியவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளதையடுத்து பல்வேறு அரசு நிறுவனங்களில் பணம் வழங்கும் பணிகளும் தபால் அனுப்பும் பணிகளும்பாதிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.500க்கும் மேற்பட்ட தொகையைஒருவருக்கு அளிக்கும்போது, அதற்கு அத்தாட்சியாக ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அவரிடம் கையெழுத்துவாங்கப்படும்.
ரூ.1 மதிப்புள்ள இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் பெரும்பாலும் தபால் நிலையங்களில்தான் விற்பனையாகும்.
அப்போதைக்கு அப்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்புகளுக்குத் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான். ஆனால்இம்முறை தொடர்ந்து நீண்ட நாட்களாகவே ரெவின்யூ ஸ்டாம்ப் கிடைக்கவில்லை என்று தபால் நிலையங்கள்கூறியுள்ளன.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்குவதற்கான உரியமுன் பணத்தை தபால் நிலையங்களுக்கு அரசால் அனுப்ப முடியவில்லை.
இதனால் பல்வேறு துறை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைக் கூட வாங்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.ஆனால் எல்.ஐ.சி. உள்பட சில பொதுத் துறை நிறுவனங்கள் ரெவின்யூ ஸ்டாம்புகள் இல்லாமலேயே ரசீதுகளைவழங்கி வருகின்றன.
இதற்கிடையே இந்திய அரசுப் பணி ஸ்டாம்புகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதனால்ஆயிரக்கணக்கான அரசுத் துறை சம்பந்தப்பட்ட தபால்கள் பட்டுவாடா செய்யப்பட முடியாமல் தபால்நிலையங்களில் தேங்கியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications