பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறியதாக ஸ்டாலின் மீது வழக்கு
தேனி:
ஆண்டிப்பட்டியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது விதிமுறைகள் மீறப்பட்டதாக ஸ்டாலின் உட்பட திமுகவினர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் சேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக புதன்கிழமை மாலை ஸ்டாலின்கண்டமனூருக்கு வந்தார். அங்கு பிரச்சாரத்தை துவக்கிய ஸ்டாலின் மயிலாடும்பாறை, கரட்டுப்பட்டி , முருக்கோடைபகுதிகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் எதிர்திசையில் முதல்வர் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இதனால் முதல்வர்பிரச்சாரத்தை முடித்த பிறகு, உங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கலாம் என்று ஸ்டாலினிடம் போலீசார் கூறினர்.
ஆனால் இதற்கு ஸ்டாலினுடன் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் போலீசார் ஸ்டாலினுடன் விதிமுறைக்கு புறம்பாக பல கார்கள் தொடர்ந்து வந்தது குறித்தும் போலீசார்எச்சரித்தனர்.
பிறகு இதே நிலைமை வாலிப்பாறை பகுதியிலும் ஏற்பட்டது. முதல்வர் வருவதை காரணம் காட்டி எங்களைபிரச்சாரம் செய்ய விடாமல் வேண்டுமென்றே தடுக்கிறீர்கள். எங்களுக்கு நேரம் வீணாகிறது, வழி விடுங்கள் என்றுதிமுகவினர் போலீசார் கேட்டனர். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் விதிமுறையை மீறி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பல கார்கள் தொடர்ந்து வந்ததால் தேர்தல் விதி மீறல்சட்டப்பிரிவு படி ஸ்டாலின் மீதும் திமுகவினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஸ்டாலினுடன்வந்த கார்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications