மதுரை மாநகராட்சி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
மதுரை:
மதுரை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று (வியாழக்கிழமை) முதல் மேற்கொண்டிருந்த காலவரையற்றவேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
பண்டிகை போனஸ், முன்பணம், காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 33 கோரிக்கைகளை முன்வைத்து மதுரைமாநகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனால் நேற்று துப்புரவுப் பணிகள் உள்பட அனைத்துப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
நேற்று 16 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 3,000 ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் கூடி நின்று தர்ணாசெய்தனர்.
பின்னர் நேற்று மாலை சங்கப் பிரதிநிதிகளை அழைத்து மதுரை மாநராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள்பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரைமாநகராட்சி ஊழியர்கள் தங்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்ததை வாபஸ் பெற்றுக் கொள்வதாகஅறிவித்தனர்.
அதன்படி இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணிக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications