இலங்கை: நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் தயார்
கொழும்பு:
இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்துக்கான இறுதி ஒப்பந்தம் தயாராகிவிட்டது.
கடந்த 2 நாட்களாக இலங்கையில் அமைச்சர்கள் பெரிஸ், மிலிண்டா மொரகோடா ஆகியோருடன் தொடர்ந்துஆலோசனை நடத்திய நார்வே துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விடார் ஹெலஸ்ஜெசன் இந்த ஒப்பந்தத்தைத்தயாரித்தார்.
இந்த வரைவு ஒப்பந்தத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது.
முன்னதாக லண்டனில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆண்டன் பாலசிங்கத்துடன் இந்தக் குழு ஆலோசனைநடத்தியது. புலிகள் தரப்பில் கூறப்பட்ட யோசனைகளும் நிபந்தனைகளும் இந்த ஒப்பந்ததில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்ததில் ஒரே ஒரு பிரச்சனையில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று தெரிகிறது. புலிகளுக்குஆயுதம் கொண்டு வருவதாகக் கருதப்படும் கப்பல்களை தடுத்தி நிறுத்தி சோதனையிட தங்களுக்கு அதிகாரம்வேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இதற்கு புலிகள் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் புலிகளின் கோரிக்கையை ஏற்று இனி ராணுவரீதியில் புலிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று ஒப்புக் கொள்ள இலங்கை அரசு முன்வந்துள்ளது. இதன்படி தரைவழியாகவோ, கடல்வழியாகவோ, வான்வழியாகவோ புலிகள் மீது இலங்கை எந்தத் தாக்குதலையும் நடத்தாது.
ஆனால், அதே நேரத்தில் இலங்கையின் பாதுகாப்பு கருதி கடலில் சந்தேகப்படும்படி வரும் கப்பல்களை நிறுத்திசோதனையிட தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என இலங்கை அரசு கோருகிறது.
இந்த ஒரு விஷயத்தில் தான் இரு தரப்பினருக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது.
இருப்பினும் இந்த ஒப்பந்தம் நிச்சயம் கையெழுத்தாகும் என இலங்கை இனப் பிரச்சனையை இப்போது கையாண்டுவரும் அமைச்சர்களான பெரிஸ் மற்றும் மில்ண்டா மொரகோடா ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த வரைவு ஒப்பந்தத்துடன் நார்வே தூதுக்குழுவினர் மீண்டும் லண்டன் சென்று லண்டன் பாலசிங்கத்தைச்சந்திப்பர் என்று தெரிகிறது. இதன் பின்னர் பிரச்சனைகுறிய விவகாரம் தொடர்பாக ஒரு தீர்வு காணப்படும்.
இதன் பின்னர் இரு தரப்பினரும் இந்த நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்ததில் கையெழுத்திடுவர் என்றுஎதிர்ார்க்கப்படுகிறது.
மிகுந்த நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை முடிந்து வரைவு ஒப்பந்தமும் நார்வே குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளதுஎன அமைச்சர் பெரிஸ் கூறினார்.
கடந்த கிருஸ்துமஸ் தினத்தன்று இரு தரப்பினரும் தாற்காலிக ஒரு மாத கால போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.பின்னர் அது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஒரு மாதம் முடிவதற்குள் இருதரப்பினருக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நார்வே அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications