ஸ்டாலின் மீது வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்
சென்னை:
ஆளுங்கட்சியின் வற்புறுத்தலால் தான் ஸ்டாலின் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று திமுக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
சமீபத்தில் ஆண்டிப்பட்டியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது, தேர்தல் விதிமுறைகளை மீறி ஸ்டாலினைதொடர்ந்து பல கார்கள் தொடர்ந்து வந்ததாக அவர் மீதும் திமுகவினர் மீதும் போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.
இது குறித்து திமுக தலைமை நிலைய செயலாளர் மிசா.கணேசன் நேற்று (சனிக்கிழமை) தேர்தல் ஆணையத்தில்எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஸ்டாலினின் பிரச்சாரம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு ஆண்டிப்பட்டியில் நடத்தப்பட்டது. ஆனால் தமிழகமுதல்வர் பன்னீர்செல்வத்தின் பிரச்சாரம் திட்டமிடப்படாமல், ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளும் அதேவழித்தடத்தில் 1 மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சாரம் செய்தார்.
இதனால் ஸ்டாலினின் பிரச்சாரம் தடைபட்டதோடு அவர் செல்லும்போது பெரும் போக்குவரத்து நெரிசலைஏற்படுத்தியும் வந்தனர். முதல்வரின் பிரச்சாரத்தின் போது அவர் பின் வந்த அதிக அளவு வாகனங்களை போலீசார்போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் அனுப்பி வைத்தனர்.
மேலும் முதல்வருடைய கார் படைகள் செல்லும் வரை போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்தனர். அதனால்ஸ்டாலின் சென்ற வாகனத்துக்கு முன்னால் முதல்வரோடு வந்த வாகனங்களும் சென்றன.
அவர் 27 கார்களுடன் பவனி வந்ததாகவும், இது தேர்தல் விதிமுறைக்கு புறம்பானது என்று ஆளுங்கட்சியினர்வற்புறுத்தலால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே சமயத்தில் அதிக அளவு கார்களுடன்முதல்வர் பிரச்சாரம் செய்தார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
அதிமுக அரசின் நிர்பந்தத்தால் போடப்பட்ட இந்த பொய் வழக்கை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாண்டியன் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications