கொல்கத்தா தாக்குதல்: அன்சாரியிடம் தீவிர விசாரணை
டெல்லி:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையம் தாக்குதல் தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டஅப்தாப் அன்சாரி இன்று பிற்பகல் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளான்.
துபாயில் அன்சாரியைக் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்த சி.பி.ஐ., அவனிடம் துருவித் துருவி விசாரணைசெய்து கொண்டிருக்கிறது.
அன்சாரி தலைமையிலான கும்பல் இந்தியாவில் மேலும் சில சதிகள் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும்தெரிகிறது. இதையடுத்து முக்கியமான நகரங்களுக்கு சி.பி.ஐ. போலீசார் விரைந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிறகு, அன்சாரி மீண்டும் விசாரணைக்காக சி.பி.ஐ. போலீசாரிடமேஒப்படைக்கப்பட உள்ளான்.
இதற்கிடையே பீகார் மாநிலப் போலீசாரும் அன்சாரியிடம் விசாரணை நடத்துவதற்காக ஒரு வழக்கைத் தயார்செய்து வருகின்றனர்.
பீகாரிலிருந்துதான் அன்சாரி போலி பாஸ்போர்ட் மூலம் துபாய்க்குத் தப்பினான். மேலும் பல தீவிரவாதிகளுக்குபோலி பாஸ்போர்ட்டுகள் எடுத்துக் கொடுப்பதற்கும் இவன் உதவியுள்ளான்.
கடந்த 1999ல் அன்சாரிக்கு பாஸ்போர்ட் வழங்க "ஓ.கே." கூறி கையெழுத்துப் போட்ட ஓய்வு பெற்ற போலீஸ்சப்-இன்ஸ்பெக்டரான ராம் ராஜ் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக பீகார் போலீசார் அன்சாரியைத் தங்கள் வசம் கொண்டு வருவதற்கானஅனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
எப்.பி.ஐக்கு சி.பி.ஐ. நன்றி:
இதற்கிடையே அன்சாரியைக் கைது செய்ததற்காக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐக்கு சி.பி.ஐ. நன்றிதெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளது.
அன்சாரியின் துபாய் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அந்த எண் அவனுடையதுதானா என்பதைக்கண்டறியும்படி எப்.பி.ஐயை சி.பி.ஐ. கேட்டுக் கொண்டது.
அதன்படி எப்.பி.ஐயும் அந்தத் தொலைபேசி எண் அன்சாரியுடையதுதான் என்பதை உறுதி செய்தது. இதன்பின்னரே சர்வதேச போலீசான இன்டர்போல் மூலம் அன்சாரியைக் கைது செய்வதற்கான வாரண்ட்பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் இஸ்லாமாபாத்துக்குத் தப்பிச் செல்வதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்த அன்சாரியை துபாய்போலீசார் கைது செய்து, சி.பி.ஐயிடம் ஒப்படைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications