கண்ணப்பனுக்கு அதிமுக கொடுத்த "அல்வா"
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சியை அதிமுகவில் இணைப்பதற்காக அதிமுக அலுவலகத்துக்கு சென்ற முன்னாள்அமைச்சர் கண்ணப்பனை யாரும் வரவேற்காததால் அவமானப்பட்டு திரும்பினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்து கொடிகட்டிப் பறந்தவர் கண்ணப்பன். ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்தபடியாக இவர் தான் அதிக "செல்வாக்கோடுதிகழ்ந்தார்.
கடந்த தேர்தலில் தெருவுக்கொரு ஜாதிக் கட்சிகள் உருவானபோது தானும் தனது யாதவர் சமுதாயத்தினரின் ஓட்டுகிடைக்கும் என்ற நம்பிக்கையில் "மக்கள் தமிழ் தேச"த்தை உருவாக்கினார்.
திமுகவோடு கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், எல்லா ஜாதிக் கட்சிகளோடு சேர்ந்து இவரும்மண்ணைக் கவ்வினார்.
இதையடுத்து இனி தனிக் கட்சி அரசியலில் தனக்கு எதிர்காலம் ஏதும் இல்லை என்பதை உணர்ந்த இவர்உடனடியாக "அம்மா" வீட்டுக்கே சென்றுவிடத் திட்டமிட்டார்.
இதையடுத்து தனது கட்சியின் பொதுக் குழுவை நேற்று காலை கூட்டினார் கண்ணப்பன். சென்னையில் நடந்தஅக்கூட்டத்தில் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட அவருக்கு பொதுக் குழு அதிகாரம் தந்தது.
இதன்படி கண்ணப்பன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிமுகஅலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு அவர்களைப் பார்த்த அதிமுகவினர், அவர்களைப் பார்க்காதது போல்முகத்தைத் திருப்பிககொண்டனர். யாரும் அவர்களை வரவேற்கவுமில்லை.
ஆனாலும் வருத்தப்படாத கண்ணப்பன் ஜெயலலிதா வருகைக்காக காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாகஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.
திடீரென்று அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. பதட்டமும், பவ்யமுமாய் பதிலளித்த அவர் உடனடியாஅந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றார்.
போனில் அழைத்தது யார் என்றும் அவர் எங்கு செல்கிறார் என்றும் அவரது கட்சி நிர்வாகிகளுக்குக் கூடத்தெரியவில்லை.
கண்ணப்பனின் இந்த இணைப்புக் குறித்து அதிமுக தலைமை நிலையத்திடம் கேட்டபோது, கட்சியை இணைப்பதுதொடர்பாக அதிமுக அலுவலகத்துக்கு யாருமே வரவில்லை என்று பதில் அளித்தனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications