சென்னையில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ் பெண் பிணம்: இலங்கையை சேர்ந்தவர்
சென்னை:
சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சூட்கேஸில் இளம்பெண் கொல்லப்பட்டுஇருந்தது குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடந்தது.இந்த சூட்கேஸை கைப்பற்றிய போலீசார் அதை திறந்து பார்த்த போது, அதில் ஒரு இளம்பெண் கொல்லப்பட்டுஇருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கொலை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அந்தபெண் பெயர் ஜானகி என்று அவரது அக்கா சரஸ்வதி போலீசில் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஜானகியின் கணவர் பெயர் உதயகுமார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள்இலங்கையில் உள்ள கொழும்புவில் வசித்து வந்துள்ளனர். இவரது கணவரும், கணவரின் தங்கை குமுதவள்ளியும்இவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
ஜானகி அடிக்கடி சென்னையில் உள்ள அக்கா வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஆனால் கொலையாவதற்கு 2மாதங்களுக்கு முன்பிருந்தே அவரது அக்கா வீட்டிற்கு உதயகுமாரும் குமுதவள்ளியும் அனுப்பவில்லை. மேலும்அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜானகியை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
சம்பவ தினத்தன்று இருவரும் சேர்ந்து ஜானகியை பலமாக தாக்கியுள்ளனர். பிறகு உதயகுமார் 2 சூட்கேஸ்களைவாங்கி வந்ததாக அவரது 8 வயது மகன் கவுதம் போலீசில் தெரிவித்துள்ளான்.
இது சம்பந்தமாக போலீசார் ஜானகியின் கணவர் உதயகுமார், குமுதவள்ளி உள்ளிட்ட 3 பேரை விசாரித்துவருகின்றனர். அவர்கள்தான் கொலை செய்தார்களா என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications