கலவர ஆபத்து: ஆண்டிப்பட்டியில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் பெரும் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதால், போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
ஆண்டிப்பட்டித் தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவதாக அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றன. அங்கு தேர்தலின் போது கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசுக்கு உளவுத்துறை தகவல்அனுப்பியிருந்தது.
மேலும் வாக்குச் சாவடிகளைச் சூறையாடவும் சில குழுக்கள் திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக அரசுக்குத் தகவல்வந்துள்ளது. இதையடுத்து தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா பாதுகாப்பை அதிகரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நரேஷ்குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தலின்போது கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசுக்கு தகவல் வந்துள்ளது.எனவே அங்கு பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே தேர்தலின் போது கலவரம் நடக்காமல் இருப்பதற்கு 1,300 சிறப்புப் போலீசாரும், 400 தமிழகபோலீசாரும், 200 பிற மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
ஆண்டிப்பட்டி போலீசார் தவிர, தேனி மாவட்ட போலீசாரும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்என்று நரேஷ்குப்தா கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications