ஸ்டாலின் 60 கார்களுடன் சென்றதற்கு ஆதாரம் உள்ளது: பன்னீர்
Subscribe to Oneindia Tamil
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுகவினர் தேர்தல் விதிமுறையை மீறிப் பிரச்சாரம் செய்ததற்கு வீடியோ ஆதாரங்கள்உள்ளதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
ஆண்டிப்பட்டியில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 2வது கட்டதேர்தல் பிரச்சாரத்தை பன்னீர்செல்வம் தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறிப் பிரச்சாரம் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
ஸ்டாலின் 60 கார்கள் புடைசூழச் சென்று பிரச்சாரம் செய்ததின் ஆதாரங்களையும் நாங்கள்வைத்துள்ளோம்.
இந்த ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கைகளை எடுக்கச் செல்வோம்.
கருணாநிதியின் பிரச்சாரத்தை முறியடித்துக் காட்டவே நான் தற்போது 2வது கட்ட பிரச்சாரத்தைமேற்கொண்டுள்ளேன் என்றார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications