மழைக்கு ரூ.300 கோடி பயிர்கள் நாசம்: வெள்ள நிவாரண குழுவினர் தகவல்
சென்னை:
சமீபத்தில் பெய்த கனமழையால் ரூ.300 கோடிக்கு பயிர்கள் நாசமடைந்துள்ளதாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவெள்ள நிவாரணக் குழுவினர் மதிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் பெய்த கனமழையால் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம்மாவட்டங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன. சேத மதிப்பை அறிய நிவாரணக்குழு ஒன்று பாதிக்கப்பட்டமாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது.
இந்தக் குழு தனது மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை மாநில இயற்கை சீற்ற நிவாரணக் குழுவிடம் இன்று(திங்கள்கிழமை) ஒப்படைத்தது. இதன்படி இரண்டரை லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்களும், ஒன்றரை லட்சம்ஹெக்டேர் நிலக்கடலை மற்றும் இதர பயிர்களும் நாசமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாசமடைந்த பயிர்களின் மதிப்பு சுமார் ரூ.300 கோடி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உட்பட 8 துறைகளைச் சேர்ந்த அரசுஅதிகாரிகள் கூட்டத்தை இயற்கை சீற்ற நிவாரணக் குழு சென்னையில் இன்று கூட்டியது.
இந்தக் கூட்டத்தில் நிவாரணப் பணிகள் குறித்து விவாதித்தப் பின்னர் மதிப்பீட்டு அறிக்கை முதல்வர்பன்னீர்செல்வத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது இயற்கை சீற்ற நிவாரணக் குழுவிடம் ரூ.112 கோடிக்கே நிதி உள்ளது. எனவே நிவாரணப் பணிகளுக்குத்தேவையான நிதியை அளிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நிதி அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசிலிருந்து ஒரு நிவாரணக்குழு வந்து பாதிக்கப்பட்ட நிலங்களைமதிப்பீடு செய்யும்.
இதற்கிடையே 75 சதவிகித நிவாரண நிதியையாவது அரசு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications