வழக்கமான அடுக்குமொழியில் கலக்கும் டி.ஆர்.
தேனி:
தனது வழக்கமான அடுக்குமொழி வசனத்தில் பேசி திமுகவுக்கு ஆதரவாக பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநரும்முன்னாள் எம்.எல்.ஏவுமான டி. ராஜேந்தர் ஆண்டிப்பட்டியில் கலக்கல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை)ராஜேந்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் நீங்கள் வாக்குகளை யாருக்கு போடுகிறோம் என்று யோசித்து போடவேண்டும். ஜெயலலிதாபர்கூரில் போட்டியிட்டு வென்றார். பின்பு அந்த மக்களை பற்றி எண்ணிப்பார்க்கவே இல்லை.
தன்னை ஏற்றி வைத்த எம்.ஜி.ஆரையே எட்டி உதைத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கே அந்தக்கதி என்றால் ஆண்டிப்பட்டி மக்களை அவர் எண்ணிப் பார்ப்பாரா?
ஜெயலலிதா ஊழல் செய்வதில் படு சுட்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களை உதைப்பார் எட்டி, சசிகலாவுடன்உறவாடுவார் ஒட்டி, சசிகலாவும், ஜெயலலிதாவும் வைரத்திலே போட்டிருப்பார்கள் அட்டி, சேர்த்துப் பார்ப்பார்கள்தங்கத்திலே கட்டி, குவித்துப் பார்ப்பார்கள் நோட்டுப் பெட்டி.
பன்னீர்செல்வம் பாவம். அவருக்கு பவர் ரொம்ப கம்மி, அவர் ஒரு டம்மி, காரணம் எல்லாமே அந்த மம்மி, அவர்அரைக்கச் சொன்னார் இவர் அரைப்பார் அம்மி, அவர் இன்றைக்கு அழுது புலம்புகிறார் விம்மி, ஆனந்தத்தில்ஜெயலலிதா அடிக்கிறார் கும்மி.
ஓலைக் குடிசையிலே ஏழைகளை எண்ணிப் பார்க்கும் சேகருக்கு உங்கள் ஓட்டா? போயஸ் தோட்டத்துமாளிகையிலும், ஹைதராபாத் திராட்சை தோட்டத்திலும் தென்றல் காற்று வாங்குபவருக்கு உங்கள் ஓட்டா?
ஆண்டிப்பட்டி இருப்பது தேனி பக்கம், ஆண்டிப்பட்டி மக்கள் சாய்ந்து விடக்கூடாது அந்த ராணி பக்கம்.
இவ்வாறு ராஜேந்தர் அடுக்குமொழியில் வசனம் பேசி பிரச்சாரம் செய்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications