நிருபர் கடத்தல்: பாகிஸ்தான் மீது அமெரிக்கா எரிச்சல்
வாஷிங்டன்:
அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் கடத்தலில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று பாகிஸ்தான் தொடர்ந்துகூறி வருவதைக் கேட்டு அமெரிக்கா எரிச்சல் அடைந்துள்ளது.
ஆனால் தீவிரவாதிகளின் கோரிக்கைகளை ஏற்க அமெரிக்கா மறுத்து விட்டது. அதற்குப் பிறகு டேனியலைக்கடத்தியவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை.
இதற்கிடையே டேனியல் கடத்தலில் இந்தியாவுக்குப் பங்குள்ளது என்று பாகிஸ்தான் திடீரென்று கூறியது.தொடர்ந்து அதை வலியுறுத்தியும் வருகிறது.
ஆனால் பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா நம்பவில்லை. மேலும் பாகிஸ்தானின் தொடர்ந்த இந்தக்குற்றச்சாட்டால் அமெரிக்கா மிகவும் எரிச்சலடைந்துள்ளது.
டேனியலை மீட்பதில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆரம்பத்தில் காட்டி வந்த ஆர்வம் இப்போதுஇல்லை. பதிலாக அவர் இந்தியாவைக் குற்றம் சாட்டுவதில்தான் கவனமாக உள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள்எரிச்சலுடன் கூறியுள்ளனர்.
முஷாரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளால் மீண்டும் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்க வாய்ப்புள்ளதுஎன்றும் அந்த அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் முஷாரப் அமெரிக்கா செல்லவுள்ளார். அவருடைய இந்த அமெரிக்கப் பயணம்டேனியல் கடத்தல் விவகாரம் காரணமாகப் பெரும் தோல்வியை அடையும் என்றும் கூறப்படுகிறது.
நிருபர் கடத்தலில் மேலும் 2 பேர் கைது:
இதற்கிடையே டேனியல் கடத்தப்பட்டது தொடர்பாக மேலும் 2 பேரை பாகிஸ்தான் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கைதான 2 பேரையும் பாகிஸ்தான் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்கள் தங்களிடமிருந்தசெல்போனில் இருந்து பல தொலைபேசிகளுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
அந்த தொலைபேசி நம்பர்களுக்கு உரியவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்தக்கடத்தல் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கடத்தலுக்கு முக்கிய காரணமான ஷேக் ஒமர் கராச்சியிலிருந்து பஞ்சாப்புக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications