ராஜினாமாவுக்கு முயன்ற வாஜ்பாய்: உடுப்பி சுவாமிகள்
பெல்லாரி (கர்நாடகம்):
ராமர் கோவில் கட்டுவதற்குத் தேவையான நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பினரிடம்ஒப்படைப்பதைவிட ராஜினாமா செய்வதே மேல் என்று பிரதமர் வாஜ்பாய் தெரிவித்ததாக உடுப்பி சுவாமிகள்கூறினார்.
வி.எச்.பி. அமைப்பை நிறுவியவர்களில் உடுப்பி பெஜாவர் மடத்தின் விஸ்வேஸ தீர்த்த சுவாமிகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. தற்போது ராமர் கோவில் அமைப்புக் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார்.
சமீபத்தில் வாஜ்பாயைச் சந்தித்த வி.எச்.பி. தலைவர்களுடன் விஸ்வேஸ தீர்த்த சுவாமிகளும் இருந்தார். ராமர்கோவில் கட்டத் தேவையான நிலத்தைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அவர்கள் வாஜ்பாயிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்பதைவிட நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன் என்று வாஜ்பாய் அப்போதுஅவர்களிடம் கூறியதாக விஸ்வேஸ சுவாமிகள் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைக்கு எதிராகச் செயல்பட விரும்பாததால் அந்நிலத்தை ஒப்படைக்கமுடியாது என்று வாஜ்பாய் வெளிப்படையாகக் கூறியதாகவும் விஸ்வேஸ சுவாமிகள் கூறினார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications