அமெரிக்க நிருபர் கடத்தலில் அன்சாரிக்குத் தொடர்பு?
டெல்லி:
துபாயில் கைது செய்யப்பட்ட அப்தாப் அன்சாரிக்கு அமெரிக்க நிருபர் கடத்தலில் தொடர்பு இருக்கும் என்றகோணத்தில் சி.பி.ஐ. போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் கடந்த ஜனவரி 22ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்தொடர்பாக துபாய் சென்று அன்சாரியைக் கைது செய்து டெல்லி கொண்டு வந்த சி.பி.ஐ., அவனைத் தன்னுடையகாவலில் வைத்து விசாரித்து வருகிறது.
அன்சாரியிடம் இதுவரை நடந்த விசாரணையின்போது, கராச்சியில் அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல்கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
டேனியல் கடத்தலில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் ஷேக் ஒமர் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கும்அன்சாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமானபெடரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேசன் (எப்.பி.ஐ.) வலுவான ஆதாரங்களை அளித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகளுடன் அன்சாரி இ-மெயில் மூலம் தொடர்பு வைத்திருந்தான் என்பதும்அதேபோல்தான் பாகிஸ்தானில் உள்ள ஷேக் ஒமருடனும் அவன் தொடர்பு வைத்திருந்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
அவனுக்கும் ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எப்.பி.ஐயும்தோண்டித் துருவி விசாரித்து வருகிறது.
செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்கு முக்கியக் காரணமான முகம்மது அட்டாவுக்கு அன்சாரிதான்ரூ.50 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தொழிலதிபர்களைக் கடத்தியதன் மூலம் கிடைத்தபணம்தான் இது.
ஆனால் அட்டாவுக்குப் பணம் கொடுத்ததை அன்சாரி தொடர்ந்து மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அன்சாரி மீது "பொடோ" பாயுமா?
இதற்கிடையே கொல்கத்தா தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அன்சாரி மீது பொடோ சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அன்சாரியை பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து குஜராத் எல்லை வழியாக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருட்களைக்கடத்திய குற்றம் காரணமாக அவன் மீது பொடோ சட்டம் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அன்சாரியுடன் துபாயில் கைது செய்யப்பட்ட ராஜூ சர்மா இன்று பலத்த பாதுகாப்புக்கிடையேகுஜராத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறான். டெல்லியிலிருந்து நேற்று அவன் குஜராத்துக்குக்கொண்டுவரப்பட்டான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications