இன்று ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ.
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தல் பிரசாரத்தின் ஹைலைட்டாக அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை)ஆண்டிப்பட்டிக்குக் கிளம்பிச் செல்கிறார்.
நாளை (13ம் தேதி) முதல் 5 நாட்களுக்கு அவர் கிராமம், கிராமமாக சென்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ஆண்டிப்பட்டியில் வருகிற 21ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையிலும் அதிமுகவினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குஇணையாக திமுகவினரும் வெகு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
முதல்வர் பன்னீர்செல்வம் தனது 2வது கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஜெயலலிதாசெவ்வாய்க்கிழமை ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஆண்டிப்பட்டிக்குச் சென்று,அவருக்காக வாங்கப்பட்டுள்ள புது வீட்டில் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் நாளை காலை முதல் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்துக்கிராமங்களுக்கும் அவர் சென்று ஓட்டு வேட்டையாடுகிறார்.
ஜெயலலிதாவின் வருகை ஆண்டிப்பட்டி தேர்தல் பிரசாரத்தில் உச்சகட்டத்தை ஏற்படுத்தும் என்றும் மக்களிடையேபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பும், கெடுபிடியும் அதிகம் இருக்கும். ஆனால் இந்த முறையும் பாதுகாப்பு,கெடுபிடி அதிகம் இருந்தால் பொது மக்களிடம் அதிருப்தி நிலவும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.
அதனால் பிரச்சாரத்தின் போது எந்த கெடுபிடியும் செய்ய வேண்டாம் என ஆண்டிப்பட்டியில் தேர்தல் பணியில்உள்ள போலீசாருக்கும், பாதுகாப்புப் படை போலீசாருக்கும் உத்தரவு போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதாக ஜெயலலிதாவை பார்ப்பதற்காக பிரச்சார வழியில் போக்குவரத்து வாகனங்களை எவ்விதத்தடையும் இல்லாமல் அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்தம் 5 நாட்களுக்கு ஆண்டிப்பட்டியிலேயே முகாமிட்டு பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, சனிக்கிழமை (17ம்தேதி) மாலை சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கிடையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியும் 16ம் தேதிஒரே ஒரு நாள் மட்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications