கருணாநிதிக்கு விருந்தில்லம் மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு
சென்னை:
திண்டுக்கல் குடகனாறு விருந்தினர் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி தங்குவதற்காக ஒதுக்கிய அறை ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் நகர திமுக செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர திமுக செயலாளரும், திண்டுக்கல் நகராட்சித் தலைவருமான பஷீர் அகமதுசென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டியில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும், திமுக தலைவர்கள் தங்குவதைத் தடுக்கவும்அங்குள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளை அதிமுகவினர் வேண்டும் என்றே முன்பதிவு செய்துள்ளனர்.
கருணாநிதிக்கு இஸட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அவர் எங்கு சென்றாலும் அவருக்கும்பாதுகாப்புப் படைகளுக்கும் முறையான தங்கும் வசதியை மாநில அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.
தேனி மாவட்டத்தில் கருணாநிதி தங்குவதற்காக அம்மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகியபோதுஅதற்கான தங்கும் வசதியை செய்ய இயலாது என்று கூறிவிட்டனர்.
அதனால் திண்டுக்கல் குடகனாறு சர்க்யூட் ஹவுஸில் 4 அறைகளை முன்பதிவு செய்தோம். அதற்கான உத்தரவையும்அதிகாரிகள் அளித்தனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி அந்த முன்பதிவை ரத்து செய்ய பொதுப்பணித்துறைஅதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஒதுக்கப்பட்ட அறைகளை ரத்து செய்யுமாறு நான் விண்ணப்பம் அளித்ததாக கூறி அவ்வாறு ரத்து செய்துள்ளனர்.ஆனால் நான் எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை.
அதிமுகவினரின் வற்புறத்தல் காரணமாகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர். எனவேமுன்பதிவு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அகமதுகூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சதாசிவம் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications