அயோத்தி விவகாரம்: துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார் - வி.எச்.பி.
கோயம்புத்தூர்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியின்போது, தேசிய முன்னணி மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும்தயாராக உள்ளோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் துணைத் தலைவர் ஆச்சார்ய கிரிராஜ்கிஷோர் கூறினார்.
கோயம்புத்தூரில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
நாங்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முனைந்திருப்பதால் எங்கள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும்என்று பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த அரசியல் கட்சிகளைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. ராமர் கோவில் கட்டுவதுஒன்றே எங்களது லட்சியம்.
இதற்காக நாங்கள் எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ளத் தயாராக உள்ளோம்.துப்பாக்கிக் குண்டுகளைக்கூடஎதிர்கொள்வதற்குத் தயாராகவே உள்ளோம்.
முன்பு ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவளித்த பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் தற்போதுஅரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்வர மறுக்கிறார்கள்.
அத்வானியாவது முன்பு ரத யாத்திரையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். ஆனால் அவரும் இப்போதுஅரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டார்.
இவ்விஷயத்தில் மத்தியில் பாஜக அரசு கவிழ்ந்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அதைச்சமாளிக்க வேண்டியது அவர்கள் வேலை என்றார் கிஷோர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி!












Click it and Unblock the Notifications