திமுகவுக்கு ஆதரவாக பாஜக ஓட்டு வேட்டை
ஆண்டிப்பட்டி:
தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள்ஆண்டிப்பட்டி தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியின் திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழகபாஜக தலைவரான டாக்டர் கிருபாநிதி பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின்போது கிருபாநிதி பேசியதாவது:
தாழ்த்தப்பட்டவர்களைப் பல்லக்கு தூக்கிகளாகவும் மேளதாளம் வாசிப்பவர்களாகவும்தான் பிற கட்சிகள்பயன்படுத்துகின்றன.
ஆனால் பாஜக மட்டுமே மனிதனை மனிதனாக மதிக்கிறது. இதை நீங்கள் வீட்டுக்குச் சென்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்குப் பல நன்மைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே திமுகவை ஆதரித்து நீங்கள்ஓட்டுப் போட வேண்டும் என்று கிருபாநிதி பிரச்சாரத்தில் பேசினார்.
இதற்கிடையே தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல. கணேசனும் இன்று பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளார்.
வைகை சேகருக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு அவர் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று தீவிரப் பிரச்சாரம்செய்யவுள்ளார்.
எங்கே பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்த திமுகவினருக்கு பாஜகதலைவர்களின் இந்தப் பிரச்சாரம் சற்றே தெம்பைக் கொடுத்துள்ளது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications