இந்தியா ரகசிய அணுகுண்டு சோதனை: பாக். குற்றச்சாட்டு
வாஷிங்டன்:
இந்தியா ரகசிய அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர் வாஷிங்டனில் வில்சன் சென்டரில் பேசுகையில் இந்தஅபாண்டமான குற்றச்சாட்டைக் கூறினார்.
அவர் பேசுகையில், இந்தியா சமீபத்தில் ஏவுகணைச் சோதனை நடத்தியது. இது தவிர அணு ஆயுதசோதனையையும் மிக ரகசியமாக நடத்தியுள்ளதாக எநக்கு தகவல் கிடைத்துள்ளது. இது எங்களை தூண்டிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ள சோதனையாகும் என்றார்.
அப்போது வில்சன் சென்டரின் இயக்குனர் பாப் ஹாத்வே, இந்த அணு ஆயுத சோதனை குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா என்று முஷாரபிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த முஷாரப், நான் இதற்கு ஆதாரம் எதையும தர முடியாது. ஆனால், அணு ஆயுத சோதனைநடத்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து நிச்சயமான தகவல்கள் வந்துள்ளன. இதை அமெரிக்கத் தலைவர்களிடமும்கூறியுள்ளேன் என்றார்.
பின்னர் வழக்கம்போல் காஷ்மீர் பல்லவி பாடினார். இந்திய நாடாளுமன்ற்தின் மீது தாக்குதல் நடந்ததைகண்டிக்கிறேன். ஆனால், இதையே காரணமாக வைத்துக் கொண்டு பாகிஸ்தானைத் தாக்க இந்தியா முயல்வது கடும்கண்டனத்துக்குரியது என்றார்.
பின்னர் பொது மக்கள் பேசுகையில், கார்கில் ஊடுருவலை நடத்தியதே நீங்கள் தானே எனக் கேட்டனர். இதற்குபதிலளித்த முஷாரப், ஏன் கார்கிலில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள். சியாச்சின், கிழக்குப் பாகிஸ்தான் போர்(பங்களாதேஷ் உருவாக்கப்பட்ட போர்) ஆகிய பிரச்சனைகளில் இருந்து ஆரம்பியுங்களேன் என்றார்.
பின்னர் அவரே, நாம் வரலாற்றை திரும்பிப் பார்க்கக் கூடாது. அது கசப்பானதாக இருக்கலாம். எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும். நான் ராணுவத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் அமைதியின் முக்கியத்துவம் எனக்குத் தான்தெரியும்.
காஷ்மீர் பிரச்சனையை மூன்றாவது நாடு தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications