தீண்டாமையை எதிர்த்துப் போராட மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
கோயம்புத்தூர்:
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்னும் நீடித்து வரும் தீண்டாமையை எதிர்த்துப் போராடப் போவதாகதமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது மாநில மாநாட்டில்இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகளுக்கு எதிராகப் போரிடவும் மார்க்சிஸ்ட் கட்சிதீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
பெரியாருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு தமிழகத்தில் தோன்றிய 2 முக்கியக் கட்சிகளும் இந்த முக்கியமானபிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தவறிவிட்டதாகக் கூறும் மார்க்சிஸ்ட், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கப்போராடவும் முடிவு செய்துள்ளது.
அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் உடல் ரீதியானகொடுமைகளை எதிர்த்துப் போராடவும் மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும் சிறுமிகளைக் கற்பழித்தது தொடர்பான வழக்குகளை அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இவை தவிர, கூட்டுறவு அமைப்புகளுக்காக தனித் தேர்தல் கமிஷனை நியமிக்க வேண்டும், மூடிக் கிடக்கும்தொழிற்சாலைகள் மற்றும் மில்களைத் திறப்பதற்கும் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப் படாமலிருக்கும் ரயில்வேதிட்டங்கள் ஆகியவற்றுக்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைள் தொடர்பானதீர்மானங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications