திருச்சி அருகே பிடிபட்ட 6 அடி நீள முதலை
திருச்சி:
திருச்சி அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாயில் இன்று (புதன்கிழமை) காலை 6 அடி நீளமுள்ள முதலைபிடிபட்டது.
திருச்சி அருகே காட்டூரில் உய்யன் கொண்டான் கால்வாய் உள்ளது. இதற்கு அருகில் விக்டோரியா குடியிருப்புப்பகுதி உள்ளது.
இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ஒரு பெண் தண்ணீர் கொண்டு செல்ல அந்த கால்வாய்க்கு அருகில் போனார்.அப்போது 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று அந்த கால்வாயில் இருந்து ரோட்டோரப்பகுதிக்கு செல்வதைப் பார்த்துஅந்தப் பெண் பயந்து அலறினார்.
அந்தப் பெண் போட்ட சத்தத்தில் முதலை அருகில் உள்ள முட்புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டது. அலறல்சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல்அனுப்பினர்.
திருச்சி தீயணைப்புத் துறை கோட்ட அலுவலர் கே. பார்த்திபன் உள்பட 7 தீயணைப்புப் படையினர் விரைந்து வந்துபுதருக்குள் மறைந்திருந்த முதலையை பெரும் போராட்டத்துக்குப் பின் வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.
பின்னர் அந்த முதலை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த முதலையைமுக்கொம்புவில் உள்ள சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.
குடியிருப்புப் பகுதியில் இந்த முதலை பிடிபட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
திருச்சியில் காவிரி ஆறு ஓடுவதால் திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி முதலைகள் பிடிபடுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் தெப்பக் குளத்தில் ஒரு முதலை பிடிபட்டதுநினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications