For Daily Alerts
Just In
கருணாநிதிக்கு பாடம் புகட்டுங்கள்: ராம கோபாலன் ஆவேசம்
தேனி:
திருநீறு பூசுவதை அவமதித்து பேசிய கருணாநிதிக்கு பாடம் புகட்ட, ஜெயலலிதாவை வெற்றி பெற செய்யுங்கள்என்று ஹிந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கூறிள்ளார்.
இதுகுறித்து ராம கோபாலன் தேனியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
திருநீறு பூசுவதை அவமதித்து பேசிய கருணாநிதிக்கு பாடம் புகட்ட, ஜெயலலிதாவுக்கு வெற்றியைக்காணிக்கையாக்க வேண்டும். ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெறுவது உறுதியானது.
விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு ராமர் கோவில் கட்டுவதற்கு நிலத்தை தருவதற்கு பதிலாக ராஜினாமா செய்வேன் என்றுவாஜ்பாய் கூறியுள்ளது மிகவும் வருந்தத் தக்கது என்று ராம கோபாலன் கூறினார்.
Story first published: Wednesday, February 13, 2002, 5:30 [IST]