கர்நாடகத்தில் சண்டை போடும் அதிமுக- தமிழக காங்கிரஸ்
பெங்களூர்:
தமிழகத்தில் சண்டை போட்டு வரும் காங்கிரஸ்- அதிமுக தங்கள் மோதலை கர்நாடகத்துக்கும்விரிவுபடுத்தியுள்ளன.
கர்நாடகத்தில் பெங்களூரின் ஊரகப் பகுதியில் உள்ள கனகபுரா எம்.பி. தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கிறது.இதில் முன்னாள் பிரதமர் தேவ கெளடா ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ்சார்பில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியின் கீழ் வரும் பெங்களூரின் ஒரு பகுதி வாக்காளர்களும் இத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.இந்தப் பகுதியில் பெருமளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாக்குகளைக் கவர தமிழக கட்சிகளின்ஆதரவை கெளடாவும், சிவக்குமாரும் நாடியுள்ளனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதால் தமிழக காங்கிரஸ் சிவக்குமாருக்கு முழு ஆதரவுதெரிவித்துள்ளது. இது தவிர அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்தலைமையில் சில எம்.எல்.ஏக்களும் பெங்களூர் வந்துள்ளனர்.
அவர்கள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்தனர். பின்னர் சிவ்ககுமாருக்கு ஆதரவாக கனகபுராதொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து தேவ கெளாடாவின் ஆட்கள் அதிமுகவின் ஆதரவை வளைத்துப் போட்டுள்ளனர். கர்நாடக புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவைத் தலைவர் புகழேந்தி தலைமையிலான அதிமுகவினர் இன்று கெளடாவுக்கு ஆதரவுதருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் முன் வந்துள்ளனர்.
இளங்கோவன் பிரச்சாரம் செய்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகழேந்தி தலைமையிலான அதிமுகவினர்கெளடாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய புகழேந்தி, கெளடாவுக்கு ஆதரவு தர எங்கள் தலைவி உத்தரவிட்டுள்ளார்.அவர் தான் விவசாயிகளுக்காக பாடுபட்டவர். கிருஷ்ணாவின் அரசு கம்யூட்டர் தொழில்நுட்பம், ஐ.டி. தவிர வேறுஎந்தத் தொழிலையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications