கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்: 2 பேர் சீரியஸ்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி கடந்த திங்கள்கிழமை முதல்உண்ணாவிரதம் இருந்த 30 கைதிகளில் 2 பேர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 167 பேர் கைதுசெய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் இக்கைதிகளில் 30 பேர் கடந்த திங்கள்கிழமை தங்களுக்குத்தரப்பட்ட உணவைப் பெற்றுக் கொள்ள மறுத்து, உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர்.
தங்களுக்கும் இந்தக் குண்டு வெடிப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று கூறிய இந்த 30 கைதிகள், எனவேவழக்கை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது தங்களை வழக்கு முடியும் வரை ஜாமீனில் விட வேண்டும் என்றும்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்த 2 கைதிகள் நேற்று இரவு மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் உடனடியாககோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு சென்ற பிறகும் அந்த 2 கைதிகளும் தங்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று கூறி பிடிவாதம்பிடித்தனர்.
இதற்கிடையே மற்ற 28 கைதிகளும் தங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாகப் போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications