ஸ்டாலின்-கராத்தே "லேட்டஸ்ட்" மோதல்
சென்னை:
சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கும் இடையே புதிய மோதல்ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் மேயராக உள்ளார். ஆனால் அதிமுகவைச் சேர்ந்தகராத்தே தியாகராஜன் துணை மேயராக உள்ளார். மேலும், மாநகராட்சி மன்றத்தில் அதிமுக மற்றும் தமிழ் மாநிலகாங்கிரஸ் உறுப்பினர்களே பெரும்பான்மை பலத்துடன் உள்ளனர்.
கடந்த மன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த திமுக தற்போது குறைந்த உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சிவரிசையில் உள்ளது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே இரு தரப்பும் உரசிக் கொண்டன.
மேயருக்கு இணையாக தன்னையும் உருவகப்படுத்தி வருகிறார் கராத்தே தியாகராஜன் என்று ஸ்டாலின்அவ்வப்போது புகார் கூறி வருகிறார்.
மேயருக்கு உரிய கொடி மற்றும் சின்னத்தை தனது காரில் கராத்தே தியாகராஜன் கட்டியுள்ளதை எதிர்த்து அரசுகாரை புறக்கணித்து விட்டு சொந்தக் காரில்தான் மாமன்றக் கூட்டங்களுக்கு வந்து செல்கிறார் ஸ்டாலின்.
இதேபோல, ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை கராத்தே தியாகராஜன் புறக்கணித்து வருகிறார். கராத்தேவரும் நிகழ்ச்சிகளுக்கு ஸ்டாலின் போவதில்லை. ஸ்டாலின் செல்ல வேண்டிய பல நிகழ்ச்சிகளுக்கு கராத்தேதியாகராஜனே தலைமையேற்று வருகிறார்.
கடந்த மாதம் தமிழக ஆளுநர் பதவியேற்பு விழாவின்போதுகூட இருவரும் "கர் புர்" என்றுதான் இருந்தனர்.இவர்களது உரசல் இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருக்கும்இந்நிலையில், தற்போது புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அவசர மன்றக் கூட்டத்தின்போது கராத்தே தியாகராஜன் தனதுஇருக்கையில் இருந்தவாறு சில கருத்துக்களை சொல்ல முயன்றார்.
அப்போது மேயர் ஸ்டாலின் குறுக்கிட்டு, துணை மேயர் தனது இருக்கையில் அமர்ந்தவாறு பேச முடியாது. பேசவிரும்பினால் தனி இருக்கை கேட்டு அங்கு இருந்தவாறு பேசட்டும் என்று கூறி அவர் பேசுவதற்கு அனுமதிகொடுக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து ஸ்டாலினுடன் நேருக்கு நேர் கடுமையான கோபத்துடன் பேசினார் கராத்தே தியாகராஜன். அதிமுகஉறுப்பினர்களும் திமுக உறுப்பினர்களும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இந்த அமளியால் சபைக் கூட்டம்ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் கராத்தே தியாகராஜன் பேட்டியளிக்கையில், ஸ்டாலின் கூறிய படியெல்லாம் தனியாக உட்கார்ந்து பேசவேண்டும் என்று மரபும் இல்லை, சட்ட விதியும் இல்லை. இதற்காகவெல்லாம் ஸ்டாலினிடம் தனியாக அனுமதிபெற முடியாது என்றார்.
மேயர், துணை மேயருக்கிடையே நீடித்து வரும் இந்த சண்டையால் சென்னை மாநகரின் வளர்ச்சிப் பணிகள்தான்பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புலம்புகிறார்கள்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications