ஆண்டிப்பட்டி தேர்தலில் மக்கள் தைரியமாக வாக்களிக்கலாம்: டி.ஜி.பி.
மதுரை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் வாக்குப்பதிவின் போது கலவரம் நடப்பதாகத் தனக்கு தகவல் எதுவும் வரவில்லைஎன்றும் போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அத்தொகுதி மக்கள் தைரியமாக வாக்களிக்கலாம் என்றுதமிழக டி.ஜி.பி. நெய்வால் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பாதுகாப்பு குறித்து பார்வையிட வந்த நெய்வால் மதுரையில் நிருபர்களுக்குபேட்டியளிக்கும் போது கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் வாக்குப் பதிவின் போது கலவரம் நடப்பதாக எனக்கு தகவல் எதுவும் வரவில்லை. அங்குசட்டம், ஒழுங்கு எதுவும் பாதிக்காத வகையில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடப்பதற்காக 3,000 போலீசாரும், 13 கம்பெனி மத்திய ரிசர்வ்போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 ரிசர்வ் போலீசாரும், 4 தமிழக போலீசாரும் இருப்பார்கள்.
மேலும் வன்முறையைத் தூண்டிவிடுவதற்காக வெளியூர்களிலிருந்து சமூக விரோதிகள் நுழைந்துவிடக் கூடாதுஎன்பதற்காக ஆண்டிப்பட்டி தொகுதியைச் சுற்றிலும் 10 இடங்களில் "செக் போஸ்ட்" அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்புக்காக 3 புலனாய்வுக் குழுவினரும் அமைக்கப்பட்டுள்ளனர். இது தவிர 17 அதிரடிப்படைக்குழுவினர் ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் ரோந்து சுற்றி வருவார்கள்.
இதனால் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் பயமின்றி தைரியமாக வாக்களிக்கலாம்.
கலவரம் எதுவும் ஏற்படாதவாறு தடுப்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள விடுதிகள், மற்றும் தேனிமாவட்டத்திற்கு வரும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்று நெய்வால் கூறினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications