பஞ்சாப் தேர்தல்: 50 சதவீத வாக்குப்பதிவு
சண்டிகர்:
பஞ்சாபில் இன்று (புதன்கிழமை) நடந்த சட்டசபைத் தேர்தலில் 50 முதல் 60 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.
பஞ்சாப் மாநிலத்தில் 116 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலுக்காக 18,239 வாக்குச் சாவடிள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3,628 வாக்குச் சாவடிகள் பதற்றம்நிறைந்ததாக கணக்கிடப்பட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த தேர்தலுக்காக 60,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் துணைராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மத்திய ரிசர்வ் போலீசின் 30 கம்பெனிகளும் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டனர்.
1.5 லட்சம் பணியாளர்கள் தேர்தலுக்காக அமர்த்தப்பட்டனர். 116 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிக்கும்பணியில் ஈடுபட்டனர்.
முதல்முறையாக இம்மாநிலத்தில் மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அமைதியாக முடிந்தஇன்றைய தேர்தலில் 50 முதல் 60 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 3 பேர் தேர்தல் கலவரத்தில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் சிரோமணி அகாலிதளமும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தியகம்யூனிஸ்டும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தான்வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
சிரோமணி அகாலி தளத்தின் தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ்சிங பாதல் இன்று காலைவாக்களித்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், கருத்துக்கணிப்புகள் தவறானவை. எங்கள்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications