ஜெ.க்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ள புதிய நீதிக் கட்சி, அவர் மீண்டும் முதல்வர்ஆனால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது என்று அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.
அவ்வப்போது அணி மாறும் பெரிய கட்சிகளுக்கு மத்தியில் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போலதிமுக அணியிலிருந்து அவர்களாகவே வெளியேறி, ஆதரவு கேட்காத நிலையிலும் அதிமுகவுக்கு ஆதரவுஅளிப்பதாக அவர்களாகவே கூறிக் கொண்டுள்ள புதிய நீதிக் கட்சி வரும் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில்ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஆட்சிப் பொறுப்பை நடத்த வேண்டிய கடமைஅதிமுகவிற்கு உண்டு. அதன்படி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வர் ஆகும் பொருட்டுமக்கள் உத்தரவைப் பெறுவதற்காக ஆண்டிப்பட்டியில் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா முதல்வர் ஆவதே தமிழகத்திற்கு நல்லது. ஜெயலலிதாவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தஎதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எனவேதான் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்றுஅவை கூச்சலிடுகின்றன.
குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட காமராஜருக்கு ஆதரவு தெரிவித்தார் பேரறிஞர் அண்ணா. அந்தப்பண்பை மதித்து தற்போதைய தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க புதிய நீதிக் கட்சி கடமைப்பட்டுள்ளது.
அதிமுகவை ஆதரிப்பதால் நாங்கள் அந்தக் கட்சியுடன் இணைந்து விடுவோம் என்று அர்த்தம் இல்லை. அப்படிக்கருதுபவர்கள் பத்தாம் பசலிகள்.
ஆண்டிப்பட்டி தொகுதிவாழ் பிள்ளைமார்கள், வேளாளர்கள், முதலியார்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் சண்முகம் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications