அழகிரி, ஸ்டாலின் இடையே வாரிசுப் போர் நடக்கவில்லை: கருணாநிதி
சென்னை:
என் மகன்களுக்கு இடையே வாரிசுப் போர் ஏதும் நடக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
எனது இடத்தைப் பிடிப்பதற்காக ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே எந்த மோதலும் நடக்கவில்லை. அவர்கள்இருவரும் சேரக் கூடாது என்று பலர் நினைக்கின்றனர். அப்படி நினைக்கும் நபர்களில் ஒருவர் தான் முதல்வர்பன்னீர்செல்வம்.
அழகிரியும் ஸ்டாலினும் ஆண்டிப்பட்டி வேட்பாளர் வைகை சேகருக்காக தனித்தனியே பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதனால் அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதாக அர்த்தமல்ல.
திண்டுக்கல் அரசு விருந்தினர் இல்லத்தில் எனக்காக முன்பதிவு செய்திருந்த ரூம்களை ரத்து செய்யுமாறு எங்களதுமாவட்டச் செயலாளர் பஷீர் அகமத் கேட்கவேயில்லை. அவர் தான் ரத்து செய்யச் சொன்னார் என்றுபன்னீர்செல்வம் கூறுவது தவறு. இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, ரூம்களை ரத்துசெய்யுமாறு பஷீர் அகமது வாய்மொழியாகக் கேட்டுக் கொண்டதாக அரசுத் தரப்பில் கூறியுள்ளார்கள். இதுபொய்யான தகவலாகும்.
ஆண்டிப்பட்டியில் நியாயமான தேர்தல் நடத்த திமுகவினர் முழு ஒத்துழைப்புத் தருவார்கள். ஆனால்,அதிமுகவினர் நியாயமாக நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.
அரசின் ஜனநாயக விரோதப் போக்கையும், மக்களுக்கு எதிரான கொள்கைகைளயும் தான் முன் வைத்து பிரச்சாரம்செய்து வருகிறோம் என்றார் கருணாநிதி.
கட்சிகள் கலைவது நல்லது:
முன்னதாக அதிமுகவில் இணையத் திட்டமிட்டுள்ள கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சியைச் சேர்ந்த சுமார்200 பேர் அதன் தென் சென்னை மாவட்டச் செயலாளர் கோதண்டராமன் தலைமையில் அண்ணா அறிவாலயம்வந்து திமுகவில் சேர்ந்தனர்.
அவர்கள் மத்தியில் பேசிய கருணாநிதி, தமிழகத்தில் கட்சிகளைக் கலைத்துவிட்டு வேறு கட்சியில் போய்ச்சேருவதும், அல்லது கட்சியைக் கொண்டு போய் வேறு கட்சியில் இணைப்பதும் அதிகரித்து வருகிறது. இதுஜனநாயகத்துக்கு நல்லது தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கண்ணப்பன் எங்களுடன் கூட்டணி அமைத்தார். அவருக்காக இளையான்குடிதொகுதியை ஒதுக்கினோம். இதனால் தான் தமிழ்க்குடிமகன் கட்சியை விட்டே போனார்.
தோழமைக்கு முக்கியத்துவம் கட்சி திமுக. தோழமை என்று வந்துவிட்டால் எதையும் விட்டுக் கொடுக்கும் இயக்கம்தான் திமுக என்றார் கருணாநிதி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications