இன்று ஜெ, ஸ்டாலினும் பிரச்சாரம்: ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
தேனி:
ஆண்டிப்பட்டியில் இன்று ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இரு தலைவர்களும் ஒரே நாளில் இந்த சிறிய ஊரில் பிரச்சாரம் செய்ய இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவும் ஸ்டாலினும் இன்று மாலையில் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
இதையடுத்து இரு கட்சியினரின் நடமாட்டத்தையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இது ஸ்டாலின் மேற்கொண்டுள்ள 2ம் கட்ட பிரச்சாரமாகும். கடந்த சில தினங்களுக்கு முன் வந்திருந்து வைகைசேகரை ஆதரித்து முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 3 நாட்களாக கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் போகும் வழியில் முதல்வரும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் திமுகவினருக்கும்,அதிமுகவினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இந்த முறை ஜெயலலிதா இருக்கும் பக்கம் வர வேண்டாம் என ஏற்கனவே ஸ்டாலினிடம் போலீசார்கூறிவிட்டனர். இதையடுத்து அவர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வரும் இடங்களை விட்டுவிட்டு வேறுபகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மாலை 4 மணிக்கு ஆண்டிப்பட்டியில் உள்ள மேக்கிழார்பட்டியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்குகிறார்ஸ்டாலின்.
நாளை காலை 10 மணிக்கு குன்னூரில் இருந்து ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார். பின்பு மாலை 6மணிக்கு ஜக்கம்பட்டியில் பிரச்சாரம் செய்கிறார்.
திமுக சட்டசபைத் தலைவர் அன்பழகனும் இன்று ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்கிறார்.
அழகிரி ஏற்கனவே தனது ஆட்களுடன் தனியே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications