ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரும் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி:
ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அத்தொகுதி திமுகவேட்பாளரான வைகை சேகர் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியலில் 17,000க்கும் மேற்பட்ட கள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்என்றும் எனவே இந்த முறைகேடு சரிசெய்யப்படும் வரை அங்கு இடைத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி வைகை சேகர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் தவறு நடைபெற்றிருந்தாலும், தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்பட்டுஅதற்கான நடவடிக்கைகளும் சுறுசுறுப்பாக நடந்து வருவதால் இப்போதைக்கு மேற்கொண்டு எங்களால் ஒன்றும்செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறிவிட்டது.
தேர்தல் கமிஷனின் இந்த நிலையை நீதிபதி மன்மோகன் சரீனிடம் அதன் சார்பில் ஆஜரான எஸ்.கே. மேந்திரட்டாகூறினார்.
அரசியல் சட்டம் 329வது பிரிவின்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதனுடைய நடவடிக்கைகளில்நீதிமன்றம் தலையிட முடியாது என்று ஆண்டிப்பட்டி தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா சார்பில்வாதாடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறினார்.
ஆனால் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது குறித்து 329வது பிரிவு எதுவும் சொல்லவில்லை என்று வைகைசேகர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் லேகி கூறினார்.
முத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மன்மோகன் சரீன், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications