மத்திய அரசு ஊழியர் கொலை: கொலையாளிகள் சரண்
சென்னை:
சென்னையில் நடுரோட்டில் மத்திய அரசு ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 2 பேர்விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.
சென்னை அசோக்நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஏகாம்பரம் (45). இவர் ஒரு சமூக சேவகர். இவர் கடந்த சிலதினங்களுக்கு முன்பு அவர் அலுவலகம் இருக்கும் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது,ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று இவரை வெட்டிக் கொன்றது.
ஏகாம்பரத்தை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த கொலையில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடிக்கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பூமிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரைபோலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கே.கே. நகரைச் சேர்ந்த வெற்றி (29), பஞ்சநாதன் ஆகிய 2 பேரும்விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
இவர்கள் 2 பேரையும் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கஉத்தரவிட்டார். எனவே இருவரும் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications