வாக்காளர் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு
சென்னை:
இன்று (புதன்கிழமை) வெளியிடுவதாக இருந்த வரைவு வாக்காளர் பட்டியல், பின்னர் வெளியிடப்படும் என்றுதமிழக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடிகள் இருந்ததாகபுகார்கள் கூறப்பட்டன. ஏராளமான வாக்காளர்கள் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லாததால்ஓட்டுப் போட முடியாமல் புலம்பினர்.
இதையடுத்து வாக்காளர் பட்டியலை உடனடியாகத் திருத்தம் செய்யுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 11ம் தேதி வரை வாக்காளர்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது.
ஆனால் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது என்று தேர்தல் கமிஷன் திடீரென்று அறிவித்துள்ளது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை இரவு தமிழக தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர்பட்டியில் 13ம் தேதி வெளியிடப்பட வேண்டும்.
ஆனால் கடலோரப் பகுதிகளில் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதால், வருவாய்த்துறை அலுவலர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் சில மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பணி முடியவில்லை.
எனவே வாக்காளர் பட்டியல் 13ம் தேதி வெளியிடப்படாது. நிலைமையை ஆராய்ந்து பார்த்து பின்னர்வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் சாரங்கி கூறியுள்ளார்.
அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்துமாவட்டங்களிலும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முதலில் தேர்தல் கமிஷன்அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications