ஆண்டிப்பட்டியை இந்தியாவிலேயே முதல் தொகுதியாக்குவேன்: ஜெ.
தேனி:
ஆண்டிப்பட்டியை இந்தியாவிலேயே முதன்மையான தொகுதியாக மாற்றுவேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
ஆண்டிப்பட்டியின் அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா, புதன்கிழமை கண்டமனூரில் தனது பிரச்சாரத்தைதுவக்கினார். அவர் கண்டமனூர், அண்ணாநகர், அய்யனார்புரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று திறந்தஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா வேசியதாவது:
நாட்டின் மிகவும் பின் தங்கிய தொகுதியான ஆண்டிப்பட்டியை இந்தியாவின் முதன்மையான தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். நாட்டின் முதன்மையான தொகுதி ஆண்டிப்பட்டி என்று வரலாற்றில் இடம் பெறும் வகையில்பாடுபடுவேன்.
நியாயவிலைக்கடை அரிசி விலை, இலவச மின் திட்டம் போன்றவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் உங்களிடம்பொய்யாக பிரச்சாரம் செய்துள்ளனர். அவற்றை நம்பாதீர்கள். ரேஷன் அரிசி விலையை ஏற்ற மாட்டேன்.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்குக் குடும்ப அட்டைகளை விரைவில் வழங்க ஏற்பாடு செய்வேன்.
ஆண்டிப்பட்டியில் அரசுக் கலைக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும். அதே போல் தேனி மாவட்ட மக்களின்நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை விரைவில் உருவாக்குவேன்.
முந்திரி ஆலை உட்பட பல புதிய தொழிற்சாலைகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று ஜெயலலிதாபிரச்சாரத்தின்போது உறுதியளித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications