ஆண்டிப்பட்டிக்குக் கிளம்பினார் கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டியில் ஒருநாள் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு திமுக தலைவர் கருணாநிதி இன்று(வியாழக்கிழமை) மாலை ரயில் மூலம் திருச்சிக்குப் புறப்பட்டார்.
திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் நாளை மதுரைக்குக் கிளம்புவார்.
ஆண்டிப்பட்டி தொகுதியின் திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரித்து நாளை மறுநாள் (பிப்.16) கருணாநிதிபிரச்சாரம் செய்யவுள்ளார்.
அந்த ஒருநாள் மட்டும் பிரச்சாரம் செய்யும் கருணாநிதி, 2 பொதுக் கூட்டங்களில் பேசவுள்ளார்.
அவரை மேலும் ஒருநாள் பிரச்சாரம் செய்ய வைப்பதற்காகத் திமுகவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கருணாநிதி நாளை தங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்ட குடகனாறு அரசினர் விருந்தில்லம் ரத்துசெய்யப்பட்ட விவகாரத்தையடுத்து, அவர் வைரமுத்துவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் தங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டிப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாஏற்கனவே தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications