டெல்லியில் வெடிபொருளுடன் பாக். தீவிரவாதி கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் 7.9 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களுடன் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியைப்போலீசார் கைது செய்தனர்.
நேற்று (புதன்கிழமை) இரவு மேற்கு டெல்லியில் உள்ள கோத்வாலி என்ற இடத்தில் டெல்லி சிறப்பு போலீசார் ஒருதீவிரவாதியை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து 7.9 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள் உள்பட அதிபயங்கரமானவெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தானில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹெஸ்ப்-ஐ-இஸ்லாமியா என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தமுகமது ஹனீப் என்பவன்தான் அவன் என்பதும் டெல்லியில் முக்கியமான இடங்களைத் தகர்ப்பதற்கு அவன்செய்த சதியும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐயிடம் ஹனீப் தீவிர பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
ஹனீப்பை டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications