அமெரிக்க நிருபர் சாவு: ஷேக் ஒமர் வாக்குமூலம்
கராச்சி:
கராச்சியில் கடத்தப்பட்ட அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் இறந்து விட்டதாக கைது செய்யப்பட்ட தீவிரவாதிஷேக் ஒமர் இன்று (வியாழக்கிழமை) கூறினான்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், இந்தக் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜெய்ஷ்-ஏ-முகமதுஎன்ற தீவிரவாத அமைப்பின் தலைவனான ஷேக் ஒமர் லாகூரில் கைது செய்யப்பட்டான்.
முதல்கட்ட விசாரணையின்போது டேனியல் இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்று ஷேக் ஒமர் போலீசாரிடம்தெரிவித்தான்.
ஆனால் இன்று கராச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் ஒமர், நிருபர் டேனியல் இறந்து விட்டதாகத்தெரிவித்தான்.
டேனியலைக் கடத்தியதை ஒப்புக் கொண்ட ஷேக் ஒமர், எனக்குத் தெரிந்த வரையில் அவர் இறந்து விட்டார் என்றுநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான்.
ஆனால் டேனியல் எங்கே, எப்போது கொலை செய்யப்பட்டார் என்பதை ஷேக் ஒமர் கூறவில்லை.
டேனியல் உயிரோடுதான் உள்ளார் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கூறிய ஷேக் ஒமர், அவர் இறந்து விட்டார்என்று தற்போது கூறியிருப்பதால் அவர் உண்மையிலேயே கொல்லப்பட்டு விட்டாரா என்ற குழப்பம் நீடித்துவருகிறது.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் டேனியல் இறந்து விட்டதாக ஒமர்ஷேக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், "வால் ஸ்ட்ரீட்" மறுப்பு:
இந்நிலையில் ஷேக் ஒமரின் இந்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.
மேலும் உண்மையிலேயே டேனியல் கொல்லப்பட்டிருந்தால் அவருடைய உடல் கிடைக்கும் வரை வழக்கின்விசாரணையை ஒத்திவைக்கவும் கராச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே டேனியல் இன்னும் உயிருடன்தான் உள்ளார் என்று தாங்கள் நம்புவதாக "வால் ஸ்ட்ரீட்"பத்திரிக்கையும் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications