நிருபரைக் கொன்றதாக ஒமர் சொல்லவில்லை: நீதிபதி
இஸ்லாமாபாத்:
கடத்தப்பட்ட அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் இறந்துவிட்டதாக தீவிரவாதி ஷேக் ஒமர் சயீத் கூறவில்லை என்றுஇவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி அர்ஷாத் நூர் கான் கூறினார்.
ஆனால் டேனியல் இறந்துவிட்டதாக ஷேக் ஒமர் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்று இவ்வழக்கை விசாரித்துவரும் நீதிபதி கான் நிருபர்களிடம் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிக்கையான "தி நியூஸ்" கூறியுள்ளது.
ஷேக் ஒமரை 13 நாட்கள் காவலில் வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதி கான், நீதிமன்றத்தில்இதுகுறித்து அவன் எதையுமே பேசவில்லை என்றும் கூறினார்.
டேனியல் இறந்துவிட்டதாக ஷேக் ஒமர் கூறியதாக வந்துள்ள தகவல்களை இவ்வழக்கில் வாதாடி வரும் சிந்துவழக்கறிஞரான ராஜா குரேஷியும் மறுத்துள்ளார்.
ஷேக் ஒமரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் அனைத்து நிருபர்களையும் நீதிமன்றத்தைவிட்டு ராஜாவெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகுதான் டேனியல் இறந்துவிட்டதாக ஷேக் ஒமர் கூறினார் என்ற குழப்பமான செய்திகள் வெளியாகஆரம்பித்தன என்று கூறப்படுகிறது.
முக்கியக் குற்றவாளிக்கு வலைவீச்சு:
இதற்கிடையே டேனியல் கடத்தலுக்குத் திட்டம் வகுத்த மன்சூர் ஹாஸ்னைன் என்பவனைப் பாகிஸ்தான் போலீசார்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மன்சூரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவன்தான். ஷேக் ஒமருடன் இவனும் சேர்ந்து கொண்டுடேனியலைக் கடத்தத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.
ஒமர் ஷேக் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மன்சூருக்கு இப்போது வலை விரிக்கப்பட்டுள்ளது.
மன்சூர்தான் தற்போது டேனியலைப் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் காட்மாண்டுவிலிருந்து காண்டஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக்கடத்தலுக்குத் திட்டமிட்டவனும் மன்சூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications